Tuesday 26 November 2019

படர்தாமரை சீக்கிரம் குணமாக வீட்டுவைத்தியம் natural-remedies-fungus-treatment



ஃபங்கஸ்' (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.


படர் தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும்.
படர் தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.
படர் தாமரை ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி. அந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது, முதலில் சிறு பகுதியில் தாக்கி, பாதம் முழுவதும் புண்ணாகும்.
படர் தாமரை பரவும் இடங்கள் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.
Disqus Comments