Monday 24 February 2020

காய்ந்த திராட்சையை இப்படி சாப்பிட்டு பாருங்க பல நோய்கள் குணமாகும் Dry Grapes benefits in tamil





குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

சிலருக்கு இந்த சராசரி அளவைக்காட்டிலும் மிககுறைந்த எடை இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ஊறவைக்கப்பட்ட காய்ந்த திராட்சைகளை தேன் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

 இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

 காய்ந்த திராட்சைகளை சூடான பசும்பாலில் சிறிது ஊற வைத்து அருந்தி வர நரம்புகள் வலுவடைந்து, ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

 மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 4 காய்ந்த திராட்சைகளை இரவு நீரில் ஊற வைத்து, விடிந்ததும் காலை உணவை உண்பதற்கு முன்பு அவற்றை சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்

உடலின் கழிவுகளை வெளியேற்றி உடலின் வெப்பநிலையை சீராக வைப்பதில் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுகின்றன. காய்ந்த திராட்சைகள் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, சிறுநீர் நன்கு பிரிய உதவும் சிறுநீர் கற்களை கரைக்கும்.
Disqus Comments