Friday 6 December 2019

முறையற்ற மாதவிடாயை சரிசெய்ய இந்த விதைகள் போதும் irregular periods home remedies



இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை  அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.

பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம்.


 அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.’
Disqus Comments