Friday 3 January 2020

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய கற்பூரவள்ளி



கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும்.குழந்தை மருத்துவத்திலும் கற்பூரவல்லி உயர்ந்த இடத்தை வகிக்கின்றது.

மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைத் தவிர்க்க, கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி கரைய பசுமையான கற்பூரவல்லி இலைகளைத் தேவையான அளவு சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, இளஞ்சூடாக வதக்கி, சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

 குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் குணமாக ஒரு தேக்கரண்டி கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

 ஜலதோசம் கட்டுப்பட இரண்டு நாட்கள் காலை, மாலை வேளைகளில் கற்பூரவல்லி இலைச் சாறு ¼ டம்ளர் அளவுட‌ன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலை வலி குணமாகும்.

Disqus Comments