Sunday 5 January 2020

நுரையீரலில் தேங்கியுள்ள கரையாத சளியையும் கரைக்க lungs cleaning in tamil




நுரையீரல் நமது உடலில் மிக முக்கியமான செயலை செய்து வருகிறது. இது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. ஆனால் மனிதனுக்கு சளி பிரச்சனை ஏற்பட்டால் முதலில் பாதிப்படைவது நுரையீரல் தான். நமது உடலில் ஒரு நாளைக்கு 1 லிட்டர் அளவு சளி உற்பத்தி ஆகி அவை பெரும்பாலும் அந்தந்த சமயங்களில் வெளியேற்றப்பட்டுவிடும்.

சளியானது பெரும்பாலும் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சளியுடன் இரத்தம் கலந்து வந்தால் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என அறியலாம். பொதுவாக இந்த வகையான சளி மற்றும் இருமல் பிரச்சனையை அதிகம் சந்திப்பது குழந்தைகள் தான். நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை விரட்ட உதவும் எளிய இயற்கை மருத்துவத்தை இப்போது பார்க்கலாம்.

பானம் தயாரிக்கும் முறை:-

சிறிதளவு ஓட்ஸ் மற்றும் இஞ்சியை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து தேன் மற்றும் எலுமிச்சை சாறை அதனுடன் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இந்த பானத்தை தினமும் 30 மில்லி அளவு குடித்து வந்தால் நுரையீரலில் உள்ள சளி முற்றிலுமாக வெளியேறிவிடும். இந்த பானத்தை குழந்தைகள் தொடர்ந்து 40 நாள்கள் குடித்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு நுரையீரலில் உள்ள சளி வெளியேற்றப்படும்.

மற்றொரு எளிய முறை:-

நீரை நன்கு கொதிக்க வைத்து போர்வையினால் மூடி ஆவி பிடித்தால் நுரையீரலில் உள்ள சளி முற்றிலுமாக கரைந்து வெளியேறி விடும். இது மிகவும் எளிய மற்றும் விரைவில் குணமளிக்க கூடிய ஒரு முறை.
Disqus Comments