- 1 பிடி குப்பைமேனி வேர், கழுவி சுத்தம் செய்து கொண்டு, 1 லிட்டர் நீரில் இட்டு, 200மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, குடிக்க பூச்சிகள் வெளியாகும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு.
- குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.
- குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
- குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
- குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, ¼ தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.
- மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவிவர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.
- குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால் எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.
- 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.
skin allergy treatment home remedy,skin allergy medicine,skin allergy types,skin allergy cream,
skin allergy on face,face allergy treatment,skin allergy soap,skin allergy home remedy,