* சளி தொந்தரவுகளின்போது மிளகு ரசம் கைகொடுக்கும். மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை கலந்த கலவையில் எல்லோருமே ரசம் வைப்போம். இந்த ரசத்தை சளி நேரத்தில் சூடாக அருந்துவதால் சுவாசம் எளிதாவதோடு, நெஞ்சுச்சளியை அறுத்துவிடும். கடைகளில் சூப் குடிக்கும்போது மேலாக மிளகுத்தூள் தூவுவார்கள். அப்படிச் செய்வதும் இதம் தரும்.
* வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக மிளகு கசாயம் சளி, காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும். எப்பேர்ப்பட்ட காய்ச்சல் வந்தாலும் 10, 15 மிளகை எடுத்து வெறுமனே சட்டியில் போட்டு அது கருகும் அளவு வறுத்து, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாதியாக வற்றும்வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்தக் கசாயத்தை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்து வந்தால் எந்த விதமான காய்ச்சலும் பறந்துவிடும்.
home remedies for cough and cold,how to cure cold and cough in one day,14 effective home remedies for cough,home remedy for cough with phlegm,home remedies for dry cough at night,homemade cough medicine,home remedies for cough for kids,home remedies for wet cough,
