Saturday, 2 November 2019

ஒரு ஸ்பூன் பொடி போதும் வாயு தொல்லையை உடனே குணமாக்க gastric home remedy



குடற்பகுதியில்  வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். சில நேரங்களில், சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் (Small Intestinal Bacterial Overgrowth) வாய்வுப் பிரச்னை உண்டாகும்

பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயு உண்டாக்கும் வஸ்துக்களே. இவற்றைச் சமைக்கும் போது அதிகளவில் மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். 

மிளகு மற்றும் சீரகத்துக்கு இருக்கும் வாய்வகற்றி செய்கை காரணமாக, குடலில் வாயு உண்டாகாது. இருப்பினும் வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது. வாயு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும். 
Disqus Comments